சாமியாட்டத்தின் நடுவே வந்தது நாய்... அப்புறம்...

சாமியாட்டத்தின் நடுவே வந்தது நாய்... அப்புறம்...

1 mins read
c7d13229-9d47-446a-a554-4ecc5bb54057
சிலர் சாமி வந்ததுபோல நடிப்பதும் உண்டு. காணொளியில் இடம்பெற்றுள்ள பெண் அந்த ரகத்தைச் சேர்ந்தவரோ என்று பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது. படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது -

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டு இருக்கும் காணொளி ஒன்றை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

சாமி வந்ததுபோல ஆடிக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் நாய் வந்ததும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயைத் துரத்துவதும் பின்னர் ஆட்டத்தைத் தொடருவதும் அந்தக் காணெளியில் பதிவாகி உள்ளது.

சம்பவம் எங்கு, எப்போது நிகழ்ந்தது என்ற விவரங்கள் அதில் இல்லை.

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து ஆடுவதாகச் சொல்லுவார்கள்.

அந்த நேரத்துல் வெளி உலகில் எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை எனச் சொல்லப்படுவதும் உண்டு.

சிலர் சாமி வந்ததுபோல நடிப்பதும் உண்டு. காணொளியில் இடம்பெற்றுள்ள பெண் அந்த ரகத்தைச் சேர்ந்தவரோ என்று பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்