கோவை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாகப் பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் யாருமில்லை என சிபிஐ கூறிவிட்டது. ஆனால் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி புகாரின்படி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தனியாக கடந்த நவம்பரில் விசாரணையைத் துவக்கியது. நேற்று மீண்டும் நடந்த விசாரணையில் விஷ்ணுபிரியாவின் தோழியான சென்னை உதவி ஆணையர் மகேஸ்வரி, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, திருவாரூர் டிஎஸ்பி இனிகோ திவ்யன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி முத்தமிழ் முதல்வன் ஆகியோர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். விசாரணை மீண்டும் இன்று நடக்கிறது.
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு; 4 அதிகாரிகள் ரகசிய வாக்குமூலம்
1 mins read
-

