அடிபட்ட நல்ல பாம்புக்கு 22 தையல்கள் போட்டு சிகிச்சை

அடிபட்ட நல்ல பாம்புக்கு 22 தையல்கள் போட்டு சிகிச்சை

1 mins read
4502e524-6b30-43cd-8cdf-3defe9527438
அடிபட்ட நல்ல பாம்பு ஒன்றுக்கு தையல்போடும் காட்டுவளத்துறை கால்நடை மருத்துவர். படம்: ஊடகம் -

திருவண்ணாமலை: ஐந்தடி நீள நல்லபாம்பு ஒன்று திருவண்ணாமலை - போளூர் சாலையில் அடிபட்ட நிலையில் மெதுவாக ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் திருவண்ணாமலை காட்டுவளத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காட்டுவள பாதுகாவலர்கள் பாம்பை மீட்டனர்.

பின்னர் அவர்கள் பாம்பை தனியார் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அந்த பாம்பின் உடலில் அடிபட்ட இடத்தில் 22 தையல் போடப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே பாம்பு தங்க வைக்கப்பட்டுள்ளது.