மாமல்லபுரத்தில் திரண்ட சீனப் பயணிகள்

மாமல்லபுரத்தில் திரண்ட சீனப் பயணிகள்

1 mins read
d151f160-5257-44ad-b8c3-5d40fa5fa7ad
பல்லவர் சிற்ப சரித்திரத்தைக் கேட்டு வியந்த சீன நாட்டுப் பயணிகள் இயற்கை பேரிடரிலும் உருளாத, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். படம்: இந்திய ஊடகம் -

பல்லவர் கால சிற்பங்களை காண, சீன நாட்டுப் பயணியர், நேற்று (ஜனவரி 12) மாமல்லபுரத்தில் திரண்டனர்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களான கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவற்றை காண, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், முறைசாரா மாநாடாக, கடந்தாண்டு அக்டோபரில், மாமல்லபுரத்தில் சந்தித்து, சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

இச்சந்திப்பால், தமிழக - சீன, பழங்கால கடல்வழி வர்த்தகம், கலாசார தொடர்பை, சீன நாட்டினர் அறிந்தனர்.

இச்சூழலில், சீன பயணியர், தமிழகம் வர விரும்பி, மாமல்லபுரத்துக்கு, அடுத்தடுத்து அதிகளவில் வருகின்றனர்.

நவம்பர், 21ல், முதல் குழுவினர், அடுத்து, 25ல், மற்றொரு குழுவினர், அவ்வப்போது, தனி நபர்கள் என, வந்தனர்.இந்நிலையில், அந்நாட்டுப் பயணியர், இரு குழுக்களாக, 75 பேர், நேற்று, மாமல்லபுரத்திற்கு, சுற்றுலா வந்தனர்.

பிரதமர் - சீன அதிபர் கண்டுகளித்த சிற்பங்களை, ஆர்வத்துடன் கண்டனர்.

பல்லவர் சிற்ப சரித்திரம், இயற்கை பேரிடரிலும் உருளாத, வெண்ணெய் உருண்டை பாறை குறித்து விளக்கப்பட்டது.

#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்