நள்ளிரவுச் சந்தை: ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு

நள்ளிரவுச் சந்தை: ரூ.1 கோடிக்கு விற்பனையான கருவாடு

1 mins read

கடலூர்: விடிய விடிய ‌நடைபெற்‌ற கருவாட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருப்பதாக கடலூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

அங்குள்ள காராமணிக் குப்‌பத்தில் ஒவ்வொரு வாரமும் கருவாடு, காய்கறிச் சந்தை கூடுகிறது.

திங்கட்கிழமைகளில் நடக்கும் சந்தையில் அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும்.

இந்நிலையில் பொங்கலையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்க வேண்டிய கருவாடு சந்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவே துவங்கிவிட்டது.

இம்முறை கடலூர், ராமேசுவரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு‌ மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் கூடினர்.

இதனால் கருவாடு விற்பனை களைகட்டியது. திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை சுமார் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.