அதிவேகமாகச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழப்பு; இளையருக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த தேனிக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார் மாணவி அக்‌ஷயா.

பொங்கலுக்கு முதல் நாள் பள்ளி முடிந்ததும் தடிக்கல் என்னும் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார் அவர்.

அந்தப் பேர்நுது வளைவு ஒன்றில் மித மிஞ்சிய வேகத்தில் திரும்பியதால் பேருந்திலிருந்த மாணவி அக்‌ஷயாவும் வீரேஷ் என்ற இளைஞரும் தூக்கி பேருந்துக்கு வெளியே வீசப்பட்டனர். 

இதனால் படுகாயம் அடைந்த மாணவி  அக்‌ஷயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரேஷ், அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

#மாணவி #அரசுப்பேருந்து #தமிழ்முரசு