பாலமேடு ஜல்லிக்கட்டு; வீரர்கள் மீது போலிஸ் தடியடி

மதுரை: மதுரை அருகே உள்ள  பாலமேட்டில் மஞ்சமலை ஆற்றுத் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று காலை 8 மணி அளவில் துவங்கியது.    

இப்போட்டியில் சீறிப் பாயும் 700 காளைகளை அடக்க 923 காளை யர்கள் களத்தில் குதித்தனர்.

இந்நிலையில், இப்போட்டியில் முறையான ‘டோக்கன்’ அனுமதியைப்  பெறாமல் 100க்கும் மேற்பட்ட காளை களைப் பங்கேற்க வைக்க போட்டி யாளர்கள் முயன்றனர்.  

இதையடுத்து, அத்துமீறி காளை களுடன் உள்ளே நுழைய முயன்ற வர்கள் மீது போலிசார் இலேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது. 

இப்போட்டியின் பாதுகாப்பிற்காக 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு எங்கும் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

நேற்று முன்தினம் அவனியா புரத்திலும் நேற்று பாலமேட்டிலும் இன்று அலங்காநல்லூரிலும் தொட ரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தனி செல்வாக்கு உள்ளது. 

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறங்கும் நிலையில், ஜல்லிக்      கட்டு போட்டியில் வெற்றிபெறும் காளைக்கும் காளையர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக் காசு, பைக், சைக்கிள், அண்டா, குக்கர், மின்விசிறி, கட்டில், பட்டுச்சேலை, பீரோ உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மாடுபிடி வீரர்கள் மாட்டின் திமிலை மட்டுமே பிடிக்கவேண்டும், வால், கொம்பு ஆகிய பகுதிகளைப் பிடித்தால் வெளியேற்றப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அவனியாபுரத்தில் வீரர்களிடம் பிடிபடாமல் போக்கு காட்டிய காளை களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

அதன்படி புதுக்கோட்டையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனு ராதா என்பவருக்குச் சொந்தமான புருஷோத்தமன் என்ற காளை சிறந்த காளையாக முதல் பரிசைப் பெற்றது. காளையின் உரிமையாள ரிடம்  இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

 

வேடிக்கை பார்த்த பெண் மாடு முட்டி பலி

திருச்சி: தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளிலும் காளைகளும் காளையர்களும் போட்டியிடும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. 

திருச்சி மாவட்டம், சூரியூர் பகுதியிலும் இந்த ஜல்லுக்கட்டு போட்டி நடந்தது. இப்போட்டியில் 400க்கும் மேற்றபட்ட காளைகள் பங்கேற்றன. இந்தப் போட்டியைக் காண ஏராளமான மக்கள் குவிந்தனர். 

 இவர்களுள் ஒருவராக ஜல்லுக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்க்க வந்த உறையூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி என்ற பெண்ணை மாடு முட்டியதில் அவர்  உயிரிழந்தார். இந்த சம்பவம் பார்வையாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.