சுடச் சுடச் செய்திகள்

கார்-லாரி மோதி நால்வர் மரணம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் உறவினர்கள் நால்வர் மாண்டனர். அவர்களில் இருவர் பெண்கள்.

இதனால் தூத்துக்குடி புறவழிச்சாலையில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.