வளசரவாக்கம்: நவீன பாணியில் முடிவெட்டிக்கொள்ள தாய் அனுமதிக்காததால் விரக்தியடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது உயிரை துறந்துள்ளான்.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனா. இவரது மகன் சீனிவாசன். இவர் குன்றத்தூரில் தங்கி அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அதிகமாக முடி வளர்த்திருந்த சீனிவாசன், தான் ஸ்டைலாக முடிவெட்டவுள்ளதாக தாய் மோகனாவிடம் கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மோகனா, சீனிவாசனை முடி திருத்தகத்துக்கு அழைத்துச் சென்று அவர் விருப்பப்படி முடி வெட்ட வைத்துள்ளார். பின்னர் சீனிவாசனை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மோகனா வேலைக்குச் சென்றுவிட்டார். இதன்பின் மன உளைச்சல் அடைந்த சீனிவாசன் உயிரைவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

