ரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது

1971ஆம் ஆண்டில் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து தாம் கூறிய கருத்திற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியாரை விமர்சித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், “1971ல் சேலத்தில் இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி நடத்தினார். இந்துக்கடவுள்களை பெரியார் விமர்சித்ததைப் பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்,” என்று துக்ளக் இதழின் ஆசிரியரான மறைந்த சோ.ராமசாமியைக் குறிப்பிட்டு ரஜினி பேசினார்.

பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்திற்கு தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள், குறிப்பாக திராவிட இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசிய அவருக்கு எதிராக போலிஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு

தாம் கூறிய கருத்துக்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் கோரியுள்ளன.

ரஜினிக்கு எதிராக அவரது வீட்டின்முன் போராட்டம் நடத்தப்போவதாகவும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இன்று கூறினர். இதனால் ரஜினி வீட்டில் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரஜினி மன்னிப்புக்கோராவிட்டால் அவர் நடித்து அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘தர்பார்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என்றும் பெரியார் திராவிட கழகத்தினர் எச்சரித்துள்ளனர்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ரஜினி தமது வீட்டிற்கு வெளியே இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து தாம் பேசிய கருத்துக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

“சேலத்தில் நடந்த இச்சம்பவம் மறுக்க வேண்டிய ஒன்றல்ல. மாறாக, மறக்க வேண்டிய ஒன்று. ராமர், சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.

“இந்த விஷயத்தில் நான் இல்லாததையோ கற்பனையாகவோ எதையும் சொல்லவில்லை. 2017ல் அவுட்லுக் சஞ்சிகையில் வெளிவந்த செய்தியையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்து நான் பேசினேன்,” என ரஜினி கூறினார்.
இந்தியாவில் வெளியிடப்படும் ஆங்கில வார இதழாக ‘அவுட்லுக்’ திகழ்கிறது.

#தமிழ்முரசு #ரஜினி #பெரியார் #மன்னிப்புக்கேட்கமுடியாது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!