'கோடீஸ்வரி'யில் அசத்திய மதுரை பெண்; ரூ.1 கோடி வென்றார்

1 mins read
d190098b-c7a4-4357-9f7d-7b6ff79d3ff8
கெளசல்யா கார்த்திகாவுக்கு தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார். படம்: இந்திய ஊடகம் -

'கலர்ஸ்' தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியில் முதல்முறையாக வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் ரூ.1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணான கௌசல்யா கார்த்திகா என்பவர், அதிர்வுகள் மற்றும் வாய் அசைவுகள் மூலமாக பதில் அளித்து, ஜாக்பாட் தொகையான ஒரு கோடி ரூபாயை வென்று பார்வையாளர்கள் பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதிர்வுகள் மற்றும் வாய் அசைவின் மூலமே, மற்றவர் கூறும் விஷயங்களை அறிந்து செயல்படும் கவுசல்யா, பி.எஸ்சி., தொழில்நுட்பம், எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படித்துள்ளார்.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

கெளசல்யா கார்த்திகாவுக்கு தொகுப்பாளர் ராதிகா சரத்குமார் ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

பரிசாக பெற்ற பணத்தில், நாகையில் உள்ள வாய் பேச முடியாத, காது கேளாத பள்ளிக்கு உதவ இருப்பதாகச் சொன்னார் கோடீஸ்வரியான கவுசல்யா. சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இவர், சொந்தமாக, ஒரு வீடு கட்ட வேண்டும் என்றார்.

கடந்த டிசம்பர் 13ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #கௌசல்யாகார்த்திகா #மதுரை #கோடீஸ்வரி

குறிப்புச் சொற்கள்