தமிழரசன்: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு

தமிழரசன்: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் பல்வேறு கிராமங்களிலும் வளர்ந்து வரும் நகரங்களிலும் சாதிய வேற்றுமை என்பது தலைவிரித்தாடுவதாக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 4 ஆண்டு களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலை கள் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் வெளிவரும் ஆணவக் கொலைகள் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

"தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக தனியார் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

"இந்தத் தேசம் சமூக நல்லிணக்கத்தை அடியோடு புதைத்து சமூகத்தில் பிளவை அதிகரிக்கும் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது," என செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது தமிழரசன் கவலை தெரிவித்தார்.

பாஜக ஆட்சி, தேசிய அளவில் வன்கொடுமைச் சட்டத்தின் அதிகாரத்தையும் தண்டனையையும் கடுமையாக உறுதியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.