ராஜீவ் கொலை வழக்கு: 3 நாடுகளின் பதிலுக்காகக் காத்திருக்கும் சிபிஐ

ராஜீவ் கொலை வழக்கு: 3 நாடுகளின் பதிலுக்காகக் காத்திருக்கும் சிபிஐ

1 mins read

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு தொடர்பாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் குறித்து 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் படுகொலை தொடர்பான தகவல்கள் அடங்கிய 25 கடிதங்கள் 24 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன என்றும், அவை தொடர்பாக 3 நாடுகளிடம் இருந்து மட்டும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. சில தகவல்களை இறுதி செய்வதற்கே வெளிநாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.