மார்பகபுற்றுநோய்: தமிழகத்தில் ஆண்டுதோறும் 4% கூடுகிறது

சென்னை: இந்தியாவில் தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் மார்பகப் புற்றுநோய் அதிகம். 

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 4% அளவிற்கு மார்பகப் புற்றுநோய்த் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில்   5வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 10,269 பேர் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை 2016ல் 9,486 ஆகவும் 2017ல் 9,870 ஆகவும் இருந்தது. 

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மேற்கு வங்காளம், பீகார் ஆகியவை முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

Loading...
Load next