எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை

எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை

1 mins read

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்தார் என்று கூறி அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றக் கிளை, எச்.ராஜா மீது இரண்டு மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.