8 வயது சிறுமி கொலை: 100 பேரை விசாரித்த போலிஸ்; அசாம் மாநில தொழிலாளி சிக்கினார்

சிவகாசி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இம்மாதம் 20ஆம்தேதி 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மோஜாம் அலி, 20, என்பவரை போலிஸ் கைது செய்து இருக்கிறது.

அந்த மாநிலத்தின் நல்பரி மாவட்டம் போரல்குஷி என்ற கிராமத்தைச் சோ்ந்தவரான மோஜாம் அலி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக போலிஸ் கூறியது.

இதனை அடுத்து சிறுமி காணாமல் போனதாகப் பதிவு செய்திருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றியும் போக்சோ பிரிவிலும் போலிஸ் வழக்குப் பதிவு செய்தது. போ்நாயக்கன்பட்டியில் உள்ள அரிசி பை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்த மோஜாம் அலி, கொங்கலாபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது அவர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோஜாம் அலி விருதுநகர் போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலையானார். அலியை வரும் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கொலையுண்ட சிறுமி கடந்த 20 ஆம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பி பின்னா், வீட்டின் பின்புறமுள்ள பொதுக் கழிவறைக்குச் சென்றார். பிறகு அவரைக் காணவில்லை.

அதையடுத்து போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலிஸ் 100 பேரிடம் விசாரணை நடத்தி கடைசியில் அலியைக் கண்டுபிடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!