காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்த கார்த்தி அழைப்பு

காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்த கார்த்தி அழைப்பு

1 mins read

ஈரோடு: மாசடைந்துள்ள காலிங்கராயன் கால்வாயைத் தூய்மைப்படுத்த கொங்கு மக்கள் தேசிய கட்சியும் நடிகர் கார்த்தியும் முன் வந்துள்ளதற்கு காலிங்கராயன் பாசனக் குழுவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் தொடங்கி ஆவுடையார் பாறை வரை 90 கி.மீ. தூரம் கொண்ட காலிங்கராயன் கால்வாய் 700 ஆண்டுகள் பழமையானதாகும்.

நதிகள் இணைப்பின் முன்னோடியாக விளங்கிய காலிங்கராயனால் வெட்டப்பட்ட இந்த கால்வாய் மூலம், 25,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இதையடுத்து தை மாதம் 5ஆம் நாள் காலிங்கராயன் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.