தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு தரப்பினரிடையே நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மதுபானக்கடை நடத்தி வரும் ரவி என்பவரின் ஆட்களுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது ஆட்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு இரு சாராரும் குடிபோதையில் மோதிக்கொண்டனர். இந்தச் சண்டையில் செல்வம் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க போலிஸ் குவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் கோஷ்டி மோதல்: ஒருவர் கொலை; பலருக்கு கத்திக்குத்து
1 mins read

