கொசு இனப்பெருக்கம்; சிங்கப்பூர் வரும் சென்னை அதிகாரிகள்

கொசு இனப்பெருக்கம்; சிங்கப்பூர் வரும் சென்னை அதிகாரிகள்

2 mins read

சென்னை: சிங்கப்பூரின் கொசு ஆய்வுக் கூடத்தை பார்வையிட சென்னை மாநகராட்சியின் அதி காரிகள் சிங்கப்பூர் வரவிருக் கின்றனர்.

சிங்கப்பூரில் கொசு இனப் பெருக்கத்தை தடுத்து நிறுத்து வதற்காக ஆண் 'வோல்பாக்கியா' கொசுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பறக்க விடப்படுகின்றன.

இத்தகைய கொசுக்கள், பெண் கொசுக்களுடன் சேர்ந்தால் பெண் கொசுக்கள் இடும் முட்டைகளி லிருந்து குஞ்சு பொறிக்காது.

இந்தச் சோதனையில் சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் கொசுக்களுக்கு எதிராக சிங்கப்பூர் எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் நகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் விவரித்த தாக 'த டைம்ஸ் இண்டியா' தெரி வித்தது. நகராட்சிக் குழுவினர் சிங்கப்பூருக்கு ஆய்வு பயணம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் திரு ஜி.பிரகாஷ் கூறினார்.

இதற்கு அமைச்சர் வேலுமணியும் பச்சைக் கொடி காட்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் ஆய்வுக் கூடத்தில் ஆண் கொசுக்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை சிங்கப்பூர் வரும் சென்னை நகராட்சி அதிகாரிகள் கண்டறிவார்கள் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை மாநகராட்சியின் முன்னாள் நோய்ப் பரவல் தடுப்பு அதிகாரியான பி. தன்ராஜ், நல்ல யோசனையாக இருந்தாலும் அதை இங்கு நடை முறைப்படுத்துவதில் சிரமமுள்ளது என்று குறிப்பிட்டார்.

சென்னை போன்ற நகரங்களில் அக்கம்பக்க மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் பேருந்து, ரயில்கள் வாயிலாக கொசுக்கள் வந்துவிட வாய்ப்புள்ளது என்றார் அவர். இருந்தாலும் சிங்கப்பூரின் கொசுக்களை ஒழிக்கும் திட்டத்தை இங்கும் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று திரு பி.தன்ராஜ் தெரிவித் தார்.