‘கொரோனா’ தொற்றுநோய்க்கு மூலிகை மருந்து சிகிச்சை 

சென்னை: ‘கொரோனா’ தொற்றுநோய்க்கு மூலிகை மருந்து மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்று சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரத்னா சித்த மருத்துவ மனையின் சித்த மருத்துவர் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலின் காெணாளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதில், தொற்றுக் கிருமியால் ஏற்படும் காய்ச்சலையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் இயற்கை மருந்தால் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

“நாங்கள் மூலிகைகளின் சாறில் இருந்து ஒரு மருந்தை உருவாக்கியுள்ளோம். எந்த வகையான வைரஸ் காய்ச்சலையும் குணப்படுத்துவதற்கும் நாங்கள் தயாரித்த மூலிகைச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ‘கொரோனா’ தொற்றுநோயையும் மூலிகை மருந்தால் கட்டுப்படுத்த முடியும். எங்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டால் கிருமியால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு 24-40 மணி நேரத்தில் சிகிச்சையளிக்க முடியும். கொரோனா தொற்று நோயால் உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன. இதற்கு சிகிச்சையளிக்க எங்களுடைய மருந்து ஆற்றல்மிக்கது என்பதை உலக சுகாதார நிறுவனத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று திரு தணிகாசலம் குறிப்பிட்டார்.

இதற்கிடையே அந்த மருந்தை ஆய்வு செய்து, அந்த மருந்தால் கொரோனா கிருமியைக்  கட்டுப்படுத்த இயலுமா என்பதைப் பற்றி தமிழக அரசு ஆராய்ந்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon