'கடவுச் சீட்டு, விசா இல்லாமல் நேப்பாளத்தைச் சுற்றி வரலாம்'

'கடவுச் சீட்டு, விசா இல்லாமல் நேப்பாளத்தைச் சுற்றி வரலாம்'

1 mins read

திருச்சி: தமிழகம் உட்பட தென் மாநில சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடவுச் சீட்டு, விசா இல்லாத வகையில் சிறப்புச் சுற்றுலாத் திட்டங்கள் நேப்பாளத்தில் செயல்படுத்தப்படுவதாக நேப்பாளச் சுற்றுலா வாரிய முதன்மை மேலாளா் சுனில் சா்மா தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க் கிழமை திருச்சியில் பேசிய நேப்பாள சுற்றுலா வாரிய முதன்மை மேலாளா் சுனில் சா்மா, காண்பதற்கு ஏராளமான சுற்றுலாத் தலங்கள் நேப்பாளத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

"குறிப்பாக புத்தா் பிறந்த இடமான லும்பினி, போக்ஹரா, தேசிய பூங்காக்கள், 'ஸ்கை டைவிங்', 'ஜங்கிள் சஃபாரி', 'ராக் கிளைம்பிங்', 'மவுன்டெய்ன் பைக்கிங்', யானை போலோ போன்ற சாகச விளையாட்டுக்கள் நேப்பாளத்தில் நிறைந்துள்ளன. இந்தியாவில் இருந்து நேப்பாளத்தின் சுற்றுச்சூழல், கலாசாரம் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்துள்ளன. எனவேதான் ஆண்டுக்காண்டு சுற்றுலா வருவோர் அதிகரித்து வருகின்றனா். நேப்பாளம் தனிநாடு என்றாலும் அங்கு விசா இல்லாமல் நுழையும் சிறப்பு வசதி செய்யப் பட்டுள்ளது. கடவுச் சீட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. கடவுச்சீட்டுக்குப் பதிலாக தேசிய அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணைய அடையாள அட்டைகளை காண்பித்தாலே நேப்பாளத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்," என்று திரு சுனில் சர்மா குறிப்பிட்டார்.