சீமான்: நானும் தீவிரவாதிதான்; பயங்கரவாதியல்ல

சீமான்: நானும் தீவிரவாதிதான்; பயங்கரவாதியல்ல

1 mins read

மதுரை: சீமான் தானும் ஒரு தீவிரவாதி என்று கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று மதுரையில் பழனி பாபாவின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சீமான், "பழனிபாபா ஒரு தீவிரவாதி; பயங்கரவாதி அல்ல. தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்தை தீவிரமாக முன் வைப்பவர்கள் தீவிரவாதிகள். நானும் தீவிரவாதிதான். ஆனால் அந்தக் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் கத்தியால் குத்தி, வெட்டி வீழ்த்தினார்களே அவர்கள்தான் பயங்கரவாதிகள்," என்றார்.