சென்னை: சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் பேரணியோ, போராட்டமோ நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவு பிப்ரவரி 2ஆம் தேதி மாலை ஆறு மணி வரை அமலில் இருக்கும் என்றும் அதுவரை யாருக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் காவல்துறையின் இந்தத் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

