(காணொளி) கொரோனா வைரஸ் பயமா? மருத்துவரின் ஆலோசனை

(காணொளி) கொரோனா வைரஸ் பயமா? மருத்துவரின் ஆலோசனை

1 mins read
5f2da91c-3370-48ce-a6bd-bd344006c9a3
காணொளி: மருத்துவர் அஷ்வின் விஜய்யின் சமூக ஊடகப் பக்கம் -

சமூக ஊடகப் பிரபலமான மருத்துவர் அஷ்வின் விஜய், வூஹான் கொரோனோ கிருமித் தொற்று குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா கிருமித் தொற்று என்பது என்ன, அது எவ்வாறு பரவுகிறது, அதிலிருந்து தப்புவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போன்றவற்றை மருத்துவர் அஷ்வின் விவரித்துள்ளார்.

உடற்கட்டு, ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், தன்முனைப்பு போன்ற தலைப்புகளில் குறுகிய கால காணொளிகளை வெளியிட்டு இணையவாசிகளிடையே பிரபலமாக இருக்கிறார் திரு அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கிருமித் தொற்றினால் சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்; 7,700க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் பல நாடுகளிலும் இந்தக் கிருமித் தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், சீன நகரங்களிலிருந்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, இந்தக் கிருமித் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ள முதல் 30 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் தாய்லாந்து முதலிடத்தைல் உள்ளது. மலேசியா ஏழாவது இடத்திலும் சிங்கப்பூர் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த்ப் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#வூஹான்இந்தியா #வூஹான்மருத்துவர்அஷ்வின்விஜய் #தமிழ்முரசு