விலங்குப் பராமரிப்பாளரின் கையைக் கடித்துக் குதறிய புலிக்குட்டி

விலங்குப் பராமரிப்பாளரின் கையைக் கடித்துக் குதறிய புலிக்குட்டி

1 mins read

சென்னை: உயிரியல் பூங்காவில் பெண் ஊழியர் ஒருவரை ஒன்றரை வயதே ஆன புலி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னைக்கு அருகே அமைந்துள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா. இங்கு ரித்திக் என்ற பெயருடைய ஒன்றரை வயது புலி அடைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அப்பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் விஜயா என்பவர் புலி அடைக்கப்பட்டுள்ள கூண்டிற்குள் கையை நுழைத்து அதைத் தடவிக் கொடுத்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராத வகையில் அந்தப் புலி சட்டெனப் பாய்ந்து அவரது கையைக் கடித்துக் குதறியது. இதில் காயமடைந்த பரிமளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.