அதிகாலையில் சாலையில் ஆடையின்றி நடந்து சென்ற பெண்ணால் பரபரப்பு

அதிகாலையில் சாலையில் ஆடையின்றி நடந்து சென்ற பெண்ணால் பரபரப்பு

1 mins read

சென்னை: அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்றார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அதிகாலை 3 மணியளவில் ஆடை எதுவுமின்றி சாலையில் நடந்து செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து போலிசார் அங்கு விரைந்தனர். பின்னர் பெண் காவலர்கள் அந்தப் பெண்ணுக்கு உடைகளைக் கொடுத்து விசாரணை செய்தனர். இந்நிலையில் தமிழ் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.