சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்த தமிழக இளையர் அதிரடிக் கைது

சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்த தமிழக இளையர் அதிரடிக் கைது

1 mins read

சென்னை: சிறார் ஆபாசப் படம் பார்த்த இளையர் ஒருவரை சென்னை போலி சார் கைது செய்துள்ளனர்.

இளம் பட்டதாரியான அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறார்களுக்கு எதிரான குற்றங்களை, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் பொருட்டு, தமிழகக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இணையத்தளங்களில் வெளியாகும் சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம் என அறிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை யையும் மீறி இத்தகைய ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மீது தற்போது போலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் கடந்த இர ண்டாண்டுகளாக சிறுவர் சிறுமியரை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது கைபேசி எண்களை வைத்து அவரது இருப்பிடத்தைப் போலிசார் கண்டறிந்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைதாகியுள்ளார்.

சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என காவல்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.