தமிழ், சமஸ்கிருதம் ஒலிக்க தஞ்சை குடமுழுக்கு நடத்துக

மதுரை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ், சமஸ்கிருதம் இரண்டு மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் கருவறை உள்ளிட்ட எங்கும் அந்த இரு மொழிகளும் ஒலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்கும் அந்தத் திருக்குட நன்னீராட்டு விழாவில் இந்த இரண்டு மொழிகளும் ஒலிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் குடமுழுக்குக்குப் பிறகு நான்கு வார காலத்துக்குள் அந்த விழா தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்குக் கட்டளையிட்டு உள்ளனர்.

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடக்கிறது. சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ்மறை அடிப்படையில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி, தேசிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதேவேளையில், சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவர் அந்தக் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில்தான் நடத்த வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னிலையான இந்து அறநிலையத்துறையும் தஞ்சை தேவஸ்தானமும், தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கில் சிவனடியார்கள், ஓதுவார்கள், ஆதி சைவர்களைக் கொண்டு தமிழுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தன.

அனைத்து வாதங்களையும் செவிமடுத்து வந்த நீதிபதிகள், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தனர். தமிழக அரசும் தேவஸ்தானமும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளபடி, தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழ், சமஸ்கிருதத்தில் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கட்டளையிட்டது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதனிடையே, பெரியகோயில் குடமுழுக்குக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு திருப்பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன. இன்று யாக சாலை பூசை தொடங்குகிறது.

குடமுழுக்கு விழாவில் 10 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!