காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள புராதன கோயில்களில் நடந்த திருப்பணிகளில் ரூ. 3 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதாகப் புகார்கள் தலைதூக்கி இருக்கின்றன.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்தக் கோயில்களுக்கு பிப்ரவரி 5ல் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளை மூடி மறைக்கும் வகையில் குடமுழுக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் உடனே விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

