பாரதிராஜா: தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆள அனுமதியோம்

பாரதிராஜா: தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆள அனுமதியோம்

1 mins read

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி காந்த் போன்ற வெளி

மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டை ஆள்வது சரியில்லை. அவ்வாறு நடக்க

அனுமதியோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர், அசாமை ஓர் அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வதுபோல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வதுபோல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள்வதை ஏற்க முடியாது. தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும் அவர் வாழ வந்தவர் என கூறினார்.