பாலியல் வன்‌கொடுமை: 6 வயது சிறுமி உயிரிழப்பு; 11ம் வகுப்பு மாணவன் கைது

பாலியல் வன்‌கொடுமை: 6 வயது சிறுமி உயிரிழப்பு; 11ம் வகுப்பு மாணவன் கைது

1 mins read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமியைக் காணவில்லை. பெற்றோர் தேடிச்சென்றபோது டிராக்டர் ஒன்றில் பலத்த காயங்களுடன் சிறுமியின் சடலம் கிடைத்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

உடற்கூறு ஆய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்பு அந்தச் சிறுமியை அந்த மாணவரின் சகோதரர் விளையாட்டாக டிராக்டரில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சிறுமி தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.