டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: விடைத்தாள் நிறம் மாறியது

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: விடைத்தாள் நிறம் மாறியது

1 mins read

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்த விசாரணையில் அழியும் மை கொண்ட போனாக்களால் நிரப்பப்பட்ட விடைத்தாள்களின் நிறம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிறம் மாறிய விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கவனிக்கத்தவறியது ஏன் என்றும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டு வழக்கில் தலைமறைவான ஆயுதப்படை காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.