செங்கல்பட்டு: பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி, கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் சென்னைக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கு தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவுக்கூடத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கும் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
அப்போது மாணவர்கள் பட்டாக்கத்தி, துப்பாக்கி ஆகியவற்றைக் காட்டி எதிர்த்தரப்பை மிரட்டி மோதிக் கொண்டனர். இதைக் கண்டு மற்ற மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவத்தை காணொளியாக கைபேசியில் படம்பிடித்த யாரோ சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது வேகமாகப் பரவியது.
இதையடுத்து போலிசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

