'குரூப் 2' தேர்வு முறைகேடு: மேலும் நான்கு பேர் கைது

'குரூப் 2' தேர்வு முறைகேடு: மேலும் நான்கு பேர் கைது

1 mins read

சென்னை: தமிழக தேர்வாணையம் நடத்திய 'குரூப் 2 ஏ' தேர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக மேலும் நான்கு பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த முறைகேட்டிற்கு தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார் என்பவர் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு போலிசார் வலைவீசியுள்ளனர்.

சிபிசிஐடி போலிசாரால் கைது செய்யப்பட்ட நால்வரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் தேர்வில் எப்படியேனும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக 8 முதல் 13 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக அளித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும், தரகர் ஜெயக்குமாரை பிடிக்க மூன்று மாநிலங்களுக்கு தனிப்படை போலிசார் விரைந்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்படுகிறது.