நடிகர் விஜய் வீட்டில் திடீர் சோதனை

நடிகர் விஜய் வீட்டில் திடீர் சோதனை

1 mins read
846f5010-e7e0-4730-bf59-4d6b7e22696c
நடிகர் விஜய் வீட்டில் நேற்று வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். கோப்புப்படம் -

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நேற்று வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதனால் அவர் தற்போது நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியுள்ள நிலையில் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மேலும், சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனர்.