புதுக்கோட்டை: கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஐந்து பஞ்சலோக சாமி சிலைகளை கடத்தல்காரர்களிடம் இருந்து புதுக்கோட்டை போலிசார் பறிமுதல் செய்தனர். சிலைக் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து போலிசார் மாறுவேடத்தில் சென்று சிலைகளை விற்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை அணுகினர். பின்னர் கடத்தல் சிலைகளை வாங்குபவர்களைப் போல் நடித்து, 20 கிலோ எடைகொண்ட பிள்ளையார் சிலைக்கு 3.5 கோடி ரூபாய் பேரம் பேசினர். போலிசாரை நம்பிய கடத்தல்காரர்கள் சிலைகளை மறைத்து வைத்துள்ள இடத்துக்குச் சென்றபோது அங்கு மேலும் நான்கு சிலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நான்கு பேரும் கைதாகினர்.
ரூ.200 கோடி சிலைகள்; நால்வர் கைது
1 mins read

