சென்னை: ஆட்டோ மொபைல் மையத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 28 ஏக்கர் நிலப்பரப்பில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த இடத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்து உரையாற்றினார்.

