குள்ளம் ஆனாலும் உள்ளம் கவர்ந்தார்; சேர்த்தது இணையம்

குள்ளம் ஆனாலும் உள்ளம் கவர்ந்தார்; சேர்த்தது இணையம்

1 mins read
8049b47c-1342-48ca-9499-fdf61c1e924f
விக்னேஷ் வரனும் பவித்ராவும் இருவர் உள்ளமும் இணைந்த நிலையில் மாலை மாற்றிக் கொண்டனர். படம்: தமிழக ஊடகம் -

கரூர்: கரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சேர்ந்த சுமார் 4 அடி உயரம் உள்ள இளைஞர் விக்னேஷ்வரன், 25, என்பவர் பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே இணையம் வழி பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

பொழுது போக்கிற்காகவும் தனது தொழிலை விரிவுபடுத்தவும் ஃபேஸ்புக்கில் கணக்குத் தொடங்கிய விக்னேஷ்வரனுக்குச் சிவகங்கையைச் சேர்ந்த பவித்ரா, 24, என்ற இளம் பெண் நண்பராக அறிமுகமானார்.

இருவரும் காதல் கொண்டனர்.

கரூரில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

பெண் வீட்டார் மனம் கசந்து பவித்ராவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லி சென்றுவிட்டனர்.

ஆனால் மணமகன் வீட்டினர் மருமகளை அன்புடன் வரவேற்றனர். திருமணம் முடிந்ததும் புதுவாழ்வைத் தொடங்க உறவினர்களுடன் பெரு மகிழ்ச்சியுடன் மணமக்கள் புறப்பட்டுச் சென்றனர்.