காலணி விவகாரம்: 50 பேரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

காலணி விவகாரம்: 50 பேரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்

1 mins read
bb181797-2256-4946-a134-52e6cfacee6f
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து தனது காலணியைக் கழற்றச் சொன்னார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. படம்: ஊடகம் -

நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து தனது காலணியைக் கழற்றச் சொன்னார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள் முதல் பலரும் அமைச்சரைக் குறை கூறினர்.

இதனிடையே, தான் அந்தச் சிறுவனைத் தன் பேரனாகக் கருதியே காலணிகளைக் கழற்றிவிடச் சொன்னதாகக் கூறி அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு சிறுவன் குடும்பத்தினர் போலிசிடம் சென்றனர்.

இந்நிலையில், அந்தச் சிறுவன், அவரது தாய் மற்றும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினரைத் தங்கள் வாகனத்தில் ஊட்டி விருந்தினர் மாளிகைக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

அங்கு சிறுவன், அவரின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரிடத்திலும் அமைச்சர் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.