சென்னை: இந்து மதத்திற்கான உரிய சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றி ஒரு பெண் புரோகிதர் நடத்திவைத்த புதுமையான திருமணம் சென்னையில் நடந்தது.
தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட விக்னேஷ் ராகவன், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சுஷ்மா ஹரிணி இருவரும் புதுமையாக பெண் விற்பன்னர்களைக் கொண்டு திருமணம் புரிய விரும்பி, புரோகிதர் பிரமரம்ப மகேஸ்வரி என்பவரை அமர்த்தி மணம் புரிந்தனர்.
ஆனால் பாரம்பரிய நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்க அனைத்து பெண்கள் இசைக் குழுவைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இது பற்றி இரு வீட்டாரும் கருத்துக் கூறுகையில், பெண் புரோகிதர் மந்திரத்தின் பொருளை ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லி திருமணத்தை நடத்தியது சிறப்பாக இருந்தது என்றனர்.

