சேலம்: சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி செலவில் உலகத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் திடலை நேற்று முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
அமைச்சர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத், பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சீனிவாசன் முதலானோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலவர், புதிய கிரிக்கெட் திடலை இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சீனிவாசன், புதிய திடலில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்றும் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி அதில் பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.
இந்தப் புதிய திடல் எதிர்கால தலைமுறையினருக்குப் படிக்கல்லாக அமையும் என்று சொல்லி டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்தார்.
புதிய திடலில் பல வசதிகள் இருக்கின்றன என்றும் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் போட்டிகளைக் கண்டுகளிக்கும் வகையில் உலக வல்லுநர்களின் உதவியுடன் திடல் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

