ஈரோடு: "நமது இலக்கை நோக்கி நாம் பயணம் செல்ல வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் சிறந்த ஆளுமைக்கான தேவை உள்ளது. அந்த ஆளுமையை கமல்ஹாசனால் மட்டுமே கொடுக்க முடியும். எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி என்று யாருமில்லை. எதிரிக்கட்சிகள் தான் உள்ளனர்," என்றார் பாடலாசிரியர் சினேகன்.
ஈரோட்டில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது என்றார்.
எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் கமல்ஹாசனை முதல்வராக்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியின் இலக்கு என பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.

