வேலூர்: பள்ளி மாணவியைக் காதலித்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைதாகியுள்ளார். வேலூரைச் சேர்ந்த
20 வயதான குறளரசன் என்ற அம்மாணவர் அதே பகுதியை
சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியைக் காதலித்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்வதாகக் கூறி அம்மாணவியை
அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப் படுகிறது. இதனால் அம்மாணவி கர்ப்பமடைய பெற்றோர் போலிசில் புகாரளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் குறளரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

