சுடச் சுடச் செய்திகள்

தமிழக மாணவர்களுக்காக தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்

சென்னை: தமிழக மாணவர்கள்  மருத்துவப் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து, நீட் தேர்வு எழுதிய வடமாநிலங்களைச் சேர்ந்த எட்டு மாணவர்கள்,  இரு மாணவி களின் புகைப்படங்களைச் சிபிசிஐடி போலிசார் வெளியிட்டுள்ளனர்.

புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள தாகவும் சிபிசிஐடி போலிசார் மேலும் கூறியுள்ளனர். 

நீட் தேர்வு விவகாரத்தில் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த சென்னை மாணவர் உட்பட  மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் முன்னதாகக் கைதாகினர்.

அவர்களிடம் நடத்திய விசா ரணையில், வடமாநில இளைஞர்கள்  தமிழக மாணவர்களுக்காக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவரம் தெரியவந்துள்ளது.

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்டம் மூலம் நடந்த இந்த முறைகேடு இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. 

தேனி மருத்துவக்கல்லூரி மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த முறை கேட்டைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் சோதனை நட வடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.  

இந்நிலையில், தேனி மாவட்ட சிபிசிஐடி போலிசார் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும் அவர்களது பெற்றோர், இடைத் தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கின் தொடர்பில்  சிபிசிஐடி போலிஸ் அதிகாரி விஜய குமார் தலைமையிலான தனிப்படை போலிசார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சிபி சிஐடி தலைமை அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது.

இந்தக் குறிப்புடன் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 10 மாணவர்களின் புகைப்படங்களையும்  வெளியிட்டுள்ளது.

இந்த மாணவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும் அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடி சென்னை அலுவல கத்துக்கு 9443884395 என்ற கைபேசி எண்ணிற்கு தெரிவிக்க லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

depccwcbcid@tn.gov.in என்ற இணையத்தள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon