கருணாஸ்: விஜய்க்கு ஒரு நியாயம், ரஜினிக்கு ஒரு நியாயம் கூடாது

கருணாஸ்: விஜய்க்கு ஒரு நியாயம், ரஜினிக்கு ஒரு நியாயம் கூடாது

2 mins read

சென்னை: விஜய்க்கு ஒரு நியாயம், ரஜினிக்கு ஒரு நியாயம் கூடாது.வருமான வரித்துறை சோதனை என்பது சட்டத்துக்கு உட்பட்டது தான். இதில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு அவசியமற்றது என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சலுகை அளித்துள்ளது என்ற தகவல் உண்மையா எனத் தெரியவில்லை என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

ரஜினிக்கு என சலுகை கொடுக்க வாய்ப்பில்லை என்பது தான் தமது சொந்தக் கருத்து என்று தெரிவித்த கருணாஸ், அதே வேளையில் அண்மைக்காலமாக பாஜகவுக்கு சாதகமாக ரஜினி சில கருத்துகளை வெளியிடுவதால் அவருக்கு சலுகை காட்டியிருப் பார்களோ என்ற சந்தேகம் இருப்ப தாகவும் அவர் கூறினார்.

அண்மையில் நடிகர் விஜய், அவர் நடித்த 'பிகில்' படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 77 கோடி ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து விஜய்யிடம் வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் பல ஆண்டு களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது வருமானம் குறித்த சில தகவல்களை முறைப்படி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவ ருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.

அதன்பின்னர் அவருக்கு விதிக் கப்பட்ட அபராதத்தை வசூலிப்ப தில்லை என வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப் பட்டது.

இந்நிலையில் ரஜினிக்கு மட்டும் ஏன் சலுகை காட்டப்படுகிறது எனும் கேள்வியும் விவாதமும் எழுந்தன.

இதையடுத்து விஜய்க்கு ஒரு நியாயம், ரஜினிக்கு ஒரு நியாயம் கூடாது என்றார் கருணாஸ்.

"வருமான வரித்துறை சோத னைக்கு உள்நோக்கம் கற்பிக்கப்படு வதில் உண்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை. அரசியல் காழ்ப்பு ணர்ச்சியோ, எவ்வித உள்நோக்கமோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்போ இல்லாமல், நடுநிலை யுடன் சட்டப்படி வருமான வரித் துறையினர் செயல்பட வேண்டும்.

"நெய்வேலியில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கே சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

"தமிழகத்துக்கு வேண்டுமானால் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். தம்மைப் பொறுத்த வரை அவரும் இந்தியாவின் குடி மகன்தான்," என்றார் கருணாஸ்.