ராமதாஸ்: ரஜினி கட்சி துவங்கும்போது அவருடன் கூட்டணி குறித்து யோசிப்போம்

ராமதாஸ்: ரஜினி கட்சி துவங்கும்போது அவருடன் கூட்டணி குறித்து யோசிப்போம்

1 mins read

சென்னை: ரஜினி-பாமக கூட்டணி குறித்து தமிழருவி மணியனின் கருத்தை முற்றிலும் கற்பனை என்று பாமக செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ள நிலையில், இக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் "ரஜினி முதலில் கட்சியைத் தொடங்கட்டும். அதன்பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம்," என்று கூறியிருப்பதன் மூலம் அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு திருப்பத்துக்கான வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக நடிகர்களைக் கூத்தாடிகள் என விமர்சிப்பது ராமதாஸ் வழக்கம். ரஜினியையும் இதுபோல் முன்பு ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னை யில் செய்தியாளர்களுக்கு ராம தாஸ் அளித்த பேட்டியில், "ரஜினி காந்த் கட்சி தொடங்கப்போவ தாகவும் பாமகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் தமி ழருவி மணியன் கூறியிருக்கிறார். தமிழருவி மணியன் எந்தக் கருத்தையும் சொல்லலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றியோ அவரது கட்சி பற்றியோ இன்னும் வாய் திறக்காத நிலையில் அதைப்பற்றி இப்போது கூறுவது முறையல்ல. அவர் கட்சி தொடங்கிய பின்னர் எங்களது கருத்தைச் சொல்கிறோம். ரஜினி யுடன் கூட்டணி குறித்து திரை மறைவில் கூட பேச்சுவார்த்தை எதுவுமில்லை," என்று கூறினார்.