மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால நாணயங்கள்

மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால நாணயங்கள்

1 mins read
daf3393f-05a1-4bab-8dec-fe5077adc4f1
அளேபுரம் பகுதியில் கிடைத்த பழங்கால செம்பு நாணயங் களில் ஒரு பகுதி. படம்: ஊடகம் -

பென்னாகரம்: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த அளேபுரத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் பழங்கால நாணயங்கள் குறித்து அரசு கலைக் கல்லூரி வரலாற்று பேராசிரியர் ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறும்போது, "சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகியோர் காலத்தில் அளேபுரம் பகுதியில் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்துள்ளது. நாணயத் தயாரிப்பு தொழிற்சாலை இருந்ததற்கான அடை யாளமாக இப்பகுதியில் மண்ணில் அதிக அளவில் செம்புத் துகள்கள் கிடைக்கின்றன. இங்கு கிடைத்த நாணயங்களில் உருதுமொழி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அளேபுரம் பகுதியில் ஆழமான, விரிவான ஆய்வினை முறைப்படி நடத்தினால் அரிய பல வரலாற்றுத் தகவல்கள் வெளிவரும்," என்றார்.