இன்று தமிழக பட்ஜெட்: முக்கிய பிரச்சினைகளை எழுப்பத் திட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2020-21ஆம்  ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சி கரமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற் றுண்டி வழங்குதல் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஹைட்ரோ கார்பன், குரூப்- 4 தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

டெல்டா மாவட்டங்களைப் பாது காக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றும் படியும் குடியுரிமை சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என தீர்மானம் கொண்டு வரும்படியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலி யுறுத்தத் திட்டமிட்டுள்ளன.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon