தஞ்சை பெருவுடையார் கோவிலை உலகத்தின் 8வது அதிசயமாக்க பலதரப்பினரும் முயற்சி

தஞ்சாவூர்: உலக அதிசயங்களின் பட்டியலில் தஞ்சை பெருவுடையார் கோயிலை இடம்பெறச் செய்யும்  முயற்சிக்கு பலதரப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து  பணிகள் நடைபெற்று வருகின்றன.

மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் காண உலகம் முழு வதிலும் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலக அதிசய பட்டியலில் எட்டாவது இடத்தில் இக்கோவிலை இடம்பெறச் செய்ய, தஞ்சையைச் சேர்ந்த பொறியாளர் கள், வரலாற்று ஆய்வாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் என  அனைத்து தரப்பினரும் இணைந்து ஒருங்கிணைப்புக் குழுவைத் துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, தொல்லியல்துறை யின் கட்டுமான வல்லுனர் ராஜேந்திரன் கூறுகையில், உலக அதிசயப் பட்டியலில் தஞ்சை பெரிய கோவில் இடம்பெறும் வரை எங்கள் பணி ஓயாது,  இந்த முயற்சியை, கும்பாபிஷேக தினத்தில் இருந்து துவங்கியுள்ளோம் என்று  கூறினார்.