எள்ளுருண்டை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு சிகிச்சை

காரிமங்கலம்: எலி மருந்து கலந்த எள் உருண்டை களைப் பள்ளிக்கு எடுத்து வந்து சாப்பிட்ட 13 மாணவர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அவர் களுக்கு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி மாவட்டம், காரி மங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 900க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி யில் தனபால் என்பவரின் மகன் பழனிசாமி, 17, பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவர் தனது தந்தை  எலி தொந்தரவைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரித்து வைத்திருந்த எள்ளுருண்டைகளை மற்ற மாணவர்களுக்கு விசயம்  தெரியாமல் கொடுத்து விட்டதாக போலிஸ் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. 

Loading...
Load next